TNPSC தேர்வுக்கான முக்கிய குறிப்புகள்: இந்திய தேசிய தலைவர்கள், பத்திரிகைகள், இயக்கங்கள் மற்றும் வரலாற்றுச் சட்டங்கள்
1. 🚩 முக்கிய இயக்கங்கள் & நிறுவியவர்கள்
இந்திய சமூக மற்றும் அரசியல் மாற்றங்களுக்காகத் தொடங்கப்பட்ட முக்கிய இயக்கங்கள்:
சுதேசி கப்பல் கழகம்: வ.உ.சிதம்பரனார்
அவ்வை இல்லம்: முத்துலட்சுமி ரெட்டி
சாரதா சதன்: பண்டித ராமாபாய்
சுயமரியாதை இயக்கம்: தந்தை பெரியார்
இந்திய தேசிய காங்கிரஸ் (1885): ஏ.ஓ.ஹியூம்
ராமகிருஷ்ணா மிஷன்: சுவாமி விவேகானந்தர்
செஞ்சிலுவை சங்கம்: ஹென்றி டூனாண்ட்
இந்திய தேசிய ராணுவம் (INA): நேதாஜி சுபாஷ் சந்திரபோஸ்
சுயராஜ்ய கட்சி: சி.ஆர்.தாஸ், மோதிலால் நேரு
சுதந்திரா கட்சி: மூதறிஞர் ராஜாஜி
இந்திய ஊழியர் சங்கம் (Servants of India Society): கோபால கிருஷ்ண கோகலே
சிவப்புச்சட்டை இயக்கம்: கான் அப்துல் கபர்கான்
பூமிதான இயக்கம்: ஆச்சார்ய வினோபாவே
சிப்கோ இயக்கம்: சுந்தர்லால் பகுகுணா
ஆரிய சமாஜம்: தயானந்த சரஸ்வதி
பிரம்ம சமாஜம்: இராஜாராம் மோகன்ராய்
கிலாபத் இயக்கம்: அலி சகோதரர்கள்
ஹோம்ரூல் இயக்கம் (தன்னாட்சி இயக்கம்): அன்னிபெசன்ட், திலகர்
வரிகொடா இயக்கம்: சர்தார் வல்லபாய்படேல்
சாரணர் படை: பேடன் பவுல்
கால்சா இயக்கம்: குரு கோபிந்த சிங்
ஷுத்தி இயக்கம்: தயானந்த சரஸ்வதி
நிட் இந்தியா (பாரத் ஜோடோ): பாபா அம்தே
பக்தி இயக்கம்: ராமானுஜர், கபீர் தாஸ், சைதன்யர், ஜெயதேவர்
காந்தியடிகள் முன்னெடுத்த முக்கிய இயக்கங்கள்:
ஒத்துழையாமை இயக்கம்
சட்டமறுப்பு இயக்கம்
சத்தியாகிரக இயக்கம்
வெள்ளையனே வெளியேறு இயக்கம்
உப்பு சத்தியாகிரகம் (தண்டி யாத்திரை)
2. 📜 இந்திய வரலாற்றுச் சட்டங்கள் (காலவரிசை)
ஆங்கிலேயர் ஆட்சிக்காலத்தில் கொண்டுவரப்பட்ட முக்கிய சட்டங்கள்:
1773: ஒழுங்குமுறைச் சட்டம் (Regulating Act)
1784: பிட் இந்தியச் சட்டம்
1793, 1813, 1833, 1853: சாசனச் சட்டங்கள் (Charter Acts)
1858: விக்டோரியா மகாராணி பேரறிக்கை (இந்திய அரசுச் சட்டம்)
1861, 1892, 1909: இந்திய கவுன்சில் சட்டங்கள்
1878: பிராந்திய மொழிகள் சட்டம் (Vernacular Press Act)
1882: தலசுய ஆட்சி சட்டம் (ரிப்பன் பிரபு)
1883: இல்பர்ட் மசோதா
1909: மின்டோ-மார்லி சீர்திருத்தம்
1919: மாண்டேகு-செம்ஸ்ஃபோர்டு சீர்திருத்தம் (இந்திய அரசுச் சட்டம்)
1919: ரௌலட் சட்டம் (கருப்புச் சட்டம்)
1935: இந்திய அரசுச் சட்டம் (மாகாண சுயாட்சி)
1947: இந்திய சுதந்திரச் சட்டம்
1950: இந்திய அரசியலமைப்புச் சட்டம் நடைமுறை
3. 🏛️ முக்கிய அமைப்புகள் & கட்சிகள்
திராவிட முன்னேற்றக் கழகம் (DMK): சி.என்.அண்ணாதுரை
திராவிடர் கழகம் (DK): தந்தை பெரியார்
தியாசாபிகல் சொசைட்டி (பிரம்மஞான சபை): மேடம் பிளாவட்ஸ்கி, ஹென்றி ஆல்காட் (இந்தியாவில் அன்னி பெசன்ட்)
Servants of India Society: கோபாலகிருஷ்ண கோகலே
டான் சொஸைட்டி (Dawn Society): சதீஷ் சந்திரா
Patriotic Association: சையது அகமது கான்
Indian Association: சுரேந்திரநாத் பானர்ஜி
சேவா சதனம்: சுப்புலெட்சுமி
கலாஷேத்திரா: ருக்மணிதேவி அருண்டேல்
பார்வர்ட் பிளாக் (Forward Bloc): நேதாஜி சுபாஷ் சந்திரபோஸ்
Servants of People Society: லாலா லஜபதிராய்
ஏசியாடிக் சொசைட்டி (Asiatic Society): வில்லியம் ஜோன்ஸ்
காங்கிரஸ் சோசலிஸ்ட் கட்சி: ஜெயபிரகாஷ் நாராயண்
4. இந்திய தேசிய தலைவர்கள் & பத்திரிகைகள்
தேசபக்தன், நவசக்தி - திரு.வி.க.
கேசரி, மராட்டா - பாலகங்காதர திலகர்
ஒபினியன், ஹரிஜன் - மகாத்மா காந்திஜி
காமன்வீல் - அன்னிபெசன்ட்
செங்கோல் - ம.பொ. சிவஞானம்
குடியரசு, விடுதலை - பெரியார் ஈ.வெ.ராமசாமி
திராவிட நாடு, காஞ்சி - அறிஞர் அண்ணாதுரை
ஞானபானு - சுப்பிரமணிய சிவா
விவேக பானு, பாரதி - வ.உ.சிதம்பரனார்
இந்தியா, விஜயா - பாரதியார்
5. இந்திய உலகத் தலைவர்கள் - சிறப்புப்பெயர்கள்
(சிறப்புப்பெயர் - தலைவர்)
பஞ்சாப் சிங்கம் - லாலா லஜபதிராய்
லோகமான்யர் - பாலகங்காதர திலகர்
தமிழ்த் தாத்தா - உ.வே.சாமிநாத அய்யர்
தென்னாட்டு பெர்னாட்ஷா - அறிஞர் அண்ணாதுரை
இந்தியாவின் நைட்டிங்கேல் - சரோஜினி நாயுடு
இந்தியாவின் முதிர்ந்த மனிதர் - தாதாபாய் நௌரோஜி
இந்தியாவின் இரும்பு மனிதர் - வல்லபாய்படேல்
இந்தியாவின் தேசபந்து - சி.ஆர்.தாஸ்
இந்தியாவின் பங்கபந்து - முஜிபூர் ரகுமான்
தென்னாட்டு போஸ் - முத்துராமலிங்க தேவர்
தென்னாட்டுத் திலகர் - வ.உ.சிதம்பரனார்
வைக்கம் வீரர் - தந்தை பெரியார்
லிட்டில் கார்ப்பரெல் - நெப்போலியன்
இந்திய நெப்போலியன் - சமுத்திரகுப்தர்
பாரக் நெப்போலியன் - பிர்தௌசி
Comments
Post a Comment